கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 462 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 09 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.