கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்டுள்ள நிலையில், பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என பிறத்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய உட்துறையின் செயலாளர் அஜெய் பல்லா வெளியிட்ட உத்தரவில் “மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் திகதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 41 சிறுதொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை கடந்த 15-ம் திகதி விசாரித்த நீதிபதிகள் “சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.
பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.