திறக்கப்படும் என கியூபெக் மாகாண முதல்வர் லெகால்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைகள் திறப்பதில் இன்னும் 2 வாரம் நமக்குக் கைவசம் உண்டு. சூழ்நிலையை அனுசரித்தும், தரவுகளை அடிப்படையாகவும் வைத்து நல்ல முடிவை நாம் எடுப்போம்.
ஆங்கிலப்பாடசாலைகள் எவையும் திறக்கப்படாது என்று கியூஎஸ்பிஏ (QESBA) வாரியம் முடிவெடுக்க முடியாது. அவர்களால் அதை செய்யவும் முடியாது’ என கூறினார்.
எனினும், மொன்றியலில் கடைகளை திறக்க அனுமதிப்பது என்பது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.