தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பலருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்மாவட்டத்தில் ஏற்கனவே 73 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மேலும் 33 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் மட்டும் 83 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறாத 22 பேர் தவிர்த்து, தொற்றுக்கு ஆளாகாத 260க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர்மாவட்டத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை அம்மாவட்டத்தில் 226 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேட்டில் பணிபுரிந்த 850 பேர் ஊர் திரும்பிய நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 93 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.