இந்த நிலையில் 4ஆம் திகதியான நாளை (திங்கட்கிழமை) முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் இது நீடிக்கும் இந்த காலம் வரும் 28ஆம் திகதி வரை வெயில் கடுமையாக இருக்கும். வழக்கத்தைவிடவும், அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் கொடூரமாக இருக்கும்.
நமது முன்னோர்களின் வானியல் கணக்கின்படி, அக்னி நட்சத்திர காலம் என்பது கணக்கிடப்பட்ட ஒன்றாகும். சில நேரங்களில் சரியாக கத்திரி வெயில் காலத்தில்தான், மழை பெய்து நாட்டை குளிர்விக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளன்று மழை பெய்தால் கத்திரி வெயில் முடியும் வரை, நல்ல இதமான கால சூழல் நிலவும் என்பது நாம் பார்த்து வரும் அனுபவமாகும்.
இந்நிலையில், இந்த வருடம், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கத்திரி வெயிலில் வீடுகளுக்குள்ளும் கடும் புழுக்கம் நிலவும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.