தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக சென்னை இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் அதிகரித்துள்ளதை அடுத்து, இப்பகுதிக்கு சிறப்பு கவனம் கொடுக்கும் வகையில், அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். மகேஸ்குமார் அகர்வால், அம்ரேஷ் புஜாரி, அபய்குமார், அபாஷ்குமார் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.