LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 22, 2020

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பலகோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின

இந்தியாவின் பாக்ஜலசந்தி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி இந்திய மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதை பொருள் கடத்தல்காரர்களும் சிக்கினர்.
இந்தியாவின் ராமநாதபுரம் அருகே திருவாடானை பகுதியில் உள்ள பாக்ஜலசந்தி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த இருந்த போதைப்பொருள்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தேவிபட்டிணம்,திருவாடானை ஆகிய வடக்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் சிறப்பு குற்றப்பிரிவு போலிசார் இரவு பகலாக ரோந்து பணியால் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு திருவாடணை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்த போது சந்தேகத்திற்க்கு இடமான முறையில் அந்த வழியாக வந்த முச்சக்கரவண்டி ஒன்றை சிறப்பு குற்றப்பிரிவு போலிசார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்களான மெத்தோக்குலான், ஆம்ப்பிட்டமெயின், பெத்தாமெட்டயின், செம்மரக்கட்டைகள், மொபைல் போன்கள், எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் மறைத்து வைத்திருந்த நிலையில் அவையும், முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்துவதற்க்கு செயல்ப்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் தொடர்பில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலங்கை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சர்வதேச மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் இந்திய பெறுமதியாக இருக்காலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7