தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி, பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ஆம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன், பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கடந்த வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என மாணவனுடைய பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவனுடைய பெற்றோர் கடந்த சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் தேடிப் பயன் எதுவும் இன்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்