ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானத்தில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 221 பயணிகளும் இலங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யூஎல் -1504 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 221 பேரும் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைவரையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.