தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன.
குறிப்பாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு கமலஹாசன் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது கண்டனங்களை தெரிவித்துவந்தார்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மக்கள் நீதி மய்யம் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் செய்த கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கமலஹாசன் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,
“நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு சத்தியமே வெல்லும் என்பதையும் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. இது மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. ‘வெல்லும் தமிழகம்’ ”என்று குறிப்பிட்டுள்ளார்
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020