LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 1, 2020

மட்டக்களப்பில் பராமரிப்பு இல்லங்களுக்கு உலருணவு விநியோகம்!

மட்டக்களப்பில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்கள், விசேட
தேவையுடையோர், முதியோர் இல்லங்கள் போன்ற பராமரிப்பு இடங்களில் உள்ளோருக்காக உலருணவு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பில் இயங்கிவரும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக சுமார் 2 இலட்சத்து 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இயங்கிவரும் அல்பஜ்ர் நலன்புரி அமைப்பு வழங்கியுள்ளது.

இந்த உணவுப் பொதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் வைத்து உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன் மண்முனை வடக்கு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 250 வறிய குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், அல்பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுல் ரஹ்மான், செயலாளர் எம்.ஐ.எம்.கமால்தீன், மாவட்டத் தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் உட்பட பராமரிப்பு இல்லங்களின் பிரதிநிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.‪

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7