யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் கெற்பேலி தனிமைப்டுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்கா மாவத்தையினைச் சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற 78 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த முகாமில் இருந்த குறித்த வயோதிப பெண் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட முட்டு காரணமாக அவர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை உயரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.