அன்பை உணர்ந்தேன்
அம்மா என்ற சொல்லினால்
உறவை உணர்ந்தேன்
அரவணைப்பு என்ற சொல்லினால்
ஆதரவை உணர்ந்தேன்
அமுதம் என்ற சொல்லினால்
உணவை உணர்ந்தேன்
அள்ளி உச்சி மொகர்கையில்
உள்ளத்தை உணர்ந்தேன்
அதட்டி அறிவூட்டுகையில் நல்லது
அல்லது உணர்ந்தேன்
ஆராரோ பாட்டு பாடுகையில்
இசையை உணர்ந்தேன்
இன்முகம் காட்டி வரவேற்கையில்
மகிழ்வை உணர்ந்தேன்
ஈன்றவளின் ஒவ்வொறு செயலிலும்
ஈசனை உணர்ந்தேன்
உன்னதமான தன்னலமில்லா
உள்ளம் படைத்த இந்த தாய் எனும் அரிய பொக்கிஷத்தை எப்பொழுதும்
நலமாக வாழ்ந்திட இந்நாளில் வணங்கிடுவோம்..!!
அன்னையர் தின வாழ்த்துக்கள்
கவிசுதா