இந்நிலையில் இன்று இதுவரை 20 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 549 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா வைரஸால் இதுவரை 9 இறப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மூவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 765 ஆக உயர்ந்தது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் தற்போது காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 765 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 762 ஆக உயர்ந்தது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 762 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.