வசந்தகால வரவு செலவுத் திட்டத்தில், 2020-21ஆம் ஆண்டில் 299 மில்லியன் டொலர் பற்றாக்குறையை நியூ பிரன்சுவிக் அரசாங்கம் முன்னறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் பாதிப்புகளின் காரணமாக, வரவு செலவுத்திட்டத்தை விட 291.4 மில்லியன் டொலர்கள் வருவாய் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலவுகள் 100.2 மில்லியன் டொலர்கள் நிதிநிலையில் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 39.5 மில்லியன் டொலர்கள் கூட்டாட்சி வருவாயால் ஈடுசெய்யப்படுகின்றன.
நிகரக் கடன் 4.1 பில்லியன் டொலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் தொகையில் 2019-20 காலகட்டத்தை விடவும் 266.7 மில்லியன் டொலர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.