கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, கியூபெக்கில் மட்டும் 836பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 பர் உயிரிழந்துள்ளனர்.
கியூபெக் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இப்போது 1,835பேர் கொவிட்- 19 நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் இருப்பவர்களில் 205 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
நோய்த் தொற்றுச் சோதனை முடிவுகளுக்காக 1,711 நோயாளிகள் காத்திருக்கிறார்கள். 9,268பேர் குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 340ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து 332,903 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி மணித்தியாலத்தில் 12,194பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.