கனடிய பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு, 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு 300 மில்லியன் டொலரிலிருந்து 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான பாலாடைக்கட்டி (சீஸ்) மற்றும் வெண்ணெய் சேமித்து வைப்பது தொடர்பான செலவுகளை இது ஈடுசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.