ஊரடங்கால், கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள், 7-ம் திகதி அன்று திறக்கப்பட்டன. இந்த நிலையில், குறித்த தினத்தில் 172 கோடி ரூபாய்க்கும், நேற்று மட்டும் 122 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
அதிகபட்சமாக, மதுரையில், 78 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 76 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.
சென்னை மண்டலத்தில் 19 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 57 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை இடம்பெற்றுள்ளது.