கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில், 12 பேருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி, மான்ட் ட்ரெம்ப்லாண்ட் ஸ்கை ரிசோர்ட்டுக்கு அருகே சமூக ரீதியாக விலகல் பின்பற்றாத பிறந்தநாள் கொண்டாட்டத்தில், இவர்கள் கலந்துக்கொண்டதாலேயே இவர்கள் இந்த அபராதத்தினை எதிர்கொள்ளவுள்ளனர்.
இவர்கள், மொன்றியல், ஒட்டாவா மற்றும் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் என்ன அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மாகாண அரசாங்க வழக்குரைஞர்கள் தீர்மானிப்பர்.
ஆனால் அபராதம் ஒவ்வொருவருக்கும் 1,000 டொலர்கள் முதல் 6,000 டொலர்கள் வரை இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.