வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பயணிகளுக்கு தற்போது தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும், கூட்டாச்சி அரசால் நடத்தப்படும் ஒன்ராறியோவில் உள்ள ட்ரெண்டோன், கோர்ன்வெல் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இதில், சீனாவின் வுஹானில் இருந்து நாடு திரும்புள்ளவர்கள், நோய்த் தொற்றுப் பரவலின் போது வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
ஹெல்த் கனடாவின் கூற்றுப்படி, இன்னமும் 151 பேர் சுயத் தனிமைப்படுத்தல் செய்து கொண்டு கண்காணிப்பு மையத்தில் உள்ளனர்.
இதேவேளை, தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கூட்டாட்சி அரசால் நடத்தப்படும் 14 கண்காணிப்பு மையம் மற்றும் கூட்டாட்சி அரசுதவி பெறும் தங்கும் விடுதிகள், பயணிகள் குறித்து விபரங்கள் தெரிவிக்க முடியாது என்றும் ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.