கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் 313 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 695 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1148 ஆக பதிவாகியுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 437 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 மரணங்கள் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.