ஈடுபட்டிருந்த துணை இராணுவப்படை வீரர்கள் 122 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லியும் இருந்து வருகிறது. இங்கு பொது மக்கள் மட்டுமின்றி கொரோனா தட்டுப்பு பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொலிஸார் என பாரபட்சமின்றி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் மற்றும் துணை இராணுவப்படையை சேர்ந்த 122 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று மற்றும் 12 வீரர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் இன்னும் 100 வீரர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை பாதிப்புக்குள்ளான வீரர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். இதனை அடுத்து துணை இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக துணை இராணுவப்படை தலைவரிடம் உள்துறை அமைச்சகம் கேட்டறிந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பல்வேறு அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வீரர்கள் பணியில் இருக்கும் போது தங்களை தாங்களே தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.