கொரோனா வைரஸின் தீவிரம் குறையாத நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இரத்துச் செய்யுமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்துச் செய்துவிட்டு அனைத்து மாணவர்களும் சித்திபெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.