LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+29°C


















Sunday, May 31, 2020

நாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஒருவர் கடற்படை வீரர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இன்றுமட்டும் மேலும் 20 பேர் குணமடைந்த நிலையில் 801 பேர் இதுவரை வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 817 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7