இதற்கமைய நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் குறிப்பாக கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கொழும்பில் உள்ள தோட்டப்புறங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார துறையினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையிலேயே PCR பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.