நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் அறிவித்திருந்த நிலையில் இன்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.