இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் முல்லைத்தீவைச் சேர்ந்த மூவரின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்கள் மூன்று பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.