ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்று உறுதியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான தினத்தினை அறிவிப்பது தொடர்பில் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ள நிலையில் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலானது சுதந்திரமானதாக அமைய வேண்டும். அனைவரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.
தற்போது சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவில்லை. கொரோனாவின் தாக்கம் முழுமையாக சமுகத்திலிருந்து அகன்று விட்டதாக எந்தவொரு உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை திகதியை அறிவிப்பது பொருத்தமானதாக இருக்காது. தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் நாடு வழமைக்கு திரும்பி விடும் என்ற நம்பிக்கையில் தீர்மானத்தினை எடுக்க முடியாது.
ஜனநாயகத்தினை முழுமையாக நிலைநாட்டுவதானால் வேட்பாளர்கள் சுதந்திரமான பிரசாரங்களை முன்னெடுப்பதையும் 16 மில்லியன் வாக்களர்களினதும் சுதந்திரமான நடமாட்டத்தினையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
ஆகவே அதனடிப்படையியே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் தினம் பற்றி அறிவிப்பினை செய்வதற்கு முன்னதாக எம்முடன் கலந்தாலோசனைகளை நடத்தவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு கோருகின்றோம்.
அதுமட்டுமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவானது தற்போதைய சூழலில் முடிவுகளை எடுப்பதற்கு நெருக்கடியை எதிர்கொள்ளுமாயின் சட்டமா அதிபரினதும், சுகாதார தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற முடியும். அதனடிப்படையிலேயே இறுதித் தீர்மானம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.