இந்நிலையில் மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலும் வைரஸ் தீவிரத்தைத் காட்டத் தொடங்கியுள்ளது.
அங்கு இன்றைய நாளில் மாத்திரம் 403 பேர் மரணமடைந்துள்ள நிலையில் வைரஸால் இவ்வாறு இதுவரை உயிரிழப்பு பதிவாகாத நிலையில் தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 35 ஆக உள்ளதுடன் இதுவரை 22 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நாளில் தற்போதுவரை ஆயிரத்து 380 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஆயிரத்து 260 பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சையில் உள்ளனர்.
அந்நாட்டில், நேற்று 185 பேரின் மரணங்கள் பதிவாகியிருந்தன. இதற்கு முன்னரும் நூறு அளவில் இருந்த மரணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.