அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஈரளகுளம் கிராமத்தில் வசித்துவரும் 32 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் நேற்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ‘வல்வை 21 நண்பர்கள்’ அமைப்பினர் வழங்கியிருந்தனர்.
உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், கு.குணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.
உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதியுதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.