இதனால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், மதம் சார்ந்த இடங்கள் என அனைத்திலும் சவர்க்காரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவும் இடம் அமைக்கவும் அங்கு வந்து செல்வோர் கை கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறுவோருக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய்ச் சட்டம் 1987 ஆகியவற்றின் கீழ் 6 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.