யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிவேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இப்போதும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு குறையும் இல்லாமல் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பொருட்களுக்கான விலைகள் கொழும்பில் அதிகமாக இருக்கின்றது என எமது மொத்த வியாபாரிகள் கூறுகின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்தே அதிகமான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு தொடர்ந்தும் பொருட்கள் வந்தவண்ணமேதான் உள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அநேகமான மக்கள் பொருட்களை ஒரு மாதம் அளவுக்கு வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் வீடுகளில் தற்போதுள்ள பொருட்கள் அப்படியே இருக்க அன்றாடம் தேவையான பொருட்களை மாத்திரம் வாங்கினால் இந்த செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாது.
மற்றும்படி, யாழ். மாவட்டத்தில் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்பதுடன், தற்போதுள்ள அவசரகால நிலைமை சீரடைந்தால் வர்த்தகர்களுக்கு ஒரு மாதத்திற்கு வியாபாரம் நடைபெறாத அளவுக்கு மக்கள் பொருட்களை சேமித்துள்ளர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.