ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர்.
அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛ லொக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர்.
பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமுலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா’ என பெயர் சூட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.