ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தொற்றுநோய்களின் போது கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக செயற்படுத்தப்படும் சில வேறுபாடுகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
வாழ்க்கை சரியாக இருந்ததைப் போலவே திரும்ப வேண்டுமென்றால், அது உடனடியாக நடக்காது. இப்போதிலிருந்து சில வருடங்கள் கூட வேறுபாடுகள் இருக்கும்.
இந்த உலகளாவிய தொற்றுநோயை கையாள்வதில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். அது முக்கியமான பாடங்களாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என கூறினார்.