இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சுகாதார துறையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்றவகையில் மக்களுக்கு கூறுவது, புத்தாண்டு என்பது வருடாவருடம் வருவதாகும். இவ்வாறான கொள்ளைத் தொற்று நோய்கள் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வருதாகும்.
ஆகவே எங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுவரை எந்தவொரு நாடுமே வைரஸின் பூரண அறிகுறிகளைக் கண்டுபிடிக்கவில்லை. தற்போது நாம் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டியுள்ளது.
புத்தாண்டு காலத்தில் உங்களையும் உங்களை உண்மையாக நேசிப்பவர்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி, சுகாதாரம் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்.
தங்களைத் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரைகளை இயன்றளவு பின்பற்றி மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து இந்த தொற்று நோயிலிருந்து சமூனத்தைப் பாதுகாப்பது மக்களாகிய உங்களின் கைகளிலேயே இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அம்பாறையில் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடையவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாவட்டம் தோறும் குறைந்தது 2 வைத்தியசாலைகள் கொரோனா தொற்று குறித்த சிகிச்சைக்கு தாயார் நிலையில் இருக்கவேண்டும் என்ற வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய அரசாங்கத்தின் கட்டளைப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைத் தடுத்துவைத்து பரிசோதனை மையமாக மாற்றுவது குறித்து மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருடன் தயார்படுத்தலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதனைவிட கொரோனா தொற்று, பாரியளவில் பரவத் தொடங்குமாயின் அனைத்து ஆதார வைத்தியசாலைகளையும் பயன்படுத்துவதற்கான தயார்படுத்தல் நடைபெற்றுவருதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.