அத்துடன், அரசாங்கத்திடம் முழுமையாக சரணாகதியடைந்து ஆமாம் போடுவதற்கு மட்டுமே வாய்திறக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மலையக மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாடும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பல நிவாரணத் திட்டங்களை ஜனாதிபதி அறிவித்தாலும் அவை நடைமுறையில் இல்லை.
குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள்கூட மக்களுக்கு இன்னும் உரிய வகையில் கிடைக்கவில்லை. அதேபோல் மலையகத்தில் அரச இயந்திரம் திருப்திகரமாக இயங்கவில்லை. இதனால் எமது மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுத் திட்டங்களையும் எமது தலைவர் மனோ கணேசன் முன்வைத்துள்ளார். மலையகத்தில் எல்லாமே சரியாக நடக்கிறது என அறிக்கைவிட்ட தரப்பு இதன்போது மௌனித்தது.
பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், தினக்கூலிகள், சமுர்த்தி பெறுநர்கள் ஆகியோருக்கு நிவாரணங்கள் முறையாகக் கிடைக்காத நிலை காணப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.