தற்போதைய இறுதித் தகவல் படி மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 371 ஆகக் அதிகரித்துள்ளது.
அத்துடன், 16 இலட்சத்து 52 ஆயிரத்து 643 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69ஆயிரத்து 927ஆகப் பதிவாகியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி, அமெரிக்காவில் இன்று இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 236 பேரின் மரணம் பதிவாகியுள்ளது.
மேலும் ஸ்பெயினில் 523 பேரினதும், இத்தாலியில் 570 பேரினதும் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பிரித்தானியாவில் என்றுமில்லாதவாறு 980 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், பெல்ஜியத்தில் ஆகக் கூடிய மரணங்களாக இன்று மட்டும் 486 பேர் மரணித்துள்ளனர்.
இன்றைய நாளின் முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்காத நிலையில் இதுவரையான நேரத்தில் 4 ஆயிரத்து 697 பேர் மொத்தமான மரணித்துள்ளதுடன் வைரஸ் பரவலின் வீரியம் குறையாத நிலையில் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை பெரும் அச்சத்தையே ஏற்படுத்திவருகின்றது.