யாழில் இன்று (சனிக்கிழமை) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர் வசித்த தாவடிப் பகுதி முழுமையாகக் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினருடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிவரும் 13 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.