உலகெங்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாக இத்தாலி காணப்படுகிறது. அங்கு நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றனர்.
குறித்த வைரஸ் பரவலை தடுக்க இத்தாலி அரசாங்கம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதுவரை குறித்த நடவடிக்கைகள் அவ்வளவாக பலனளிக்கவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத்தாலியில் பொருளாதாரம் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இத்தாலிய பெரு வணிக நிறுவனங்களால் இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 வீதமான வீழ்ச்சியினை எதிர்நோக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ரொபேர்ட்டோ கால்ரெரி (Roberto Gualtieri), சமகால நிலைகளின் அடிப்படையில் குறித்த வீழ்ச்சி யதார்த்தமான ஒன்றே என குறிப்பிட்டுள்ளார்.
“துரதிஸ்ரவசமாக குறித்த கணக்கீடானது யதார்த்தமான ஒன்றுதான். எனினும், இத்தாலியின் பொருளாதாரம் ஒரு திடமான மீளுருவாக்கம் பெரும் என உறுதியாக கூற முடியும்” என தெரிவித்துள்ளார்.