மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பேசிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஆய்வு நடவடிக்கைகளுக்காக மட்டும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க ஒரு சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது என கூறினார்.
மே 11 அன்று பல்கலைக்கழகங்களைத் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.
“கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எந்த ஆபத்தும் இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்கள் 10% அல்லது 20% கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் மட்டுமே திறக்கப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதுவும் ஆய்வு நோக்கங்களுக்காக மட்டும். எனவே இது தொடர்பான சுற்றறிக்கை இணையதளத்தில் வெளியிடப்படும்.” என கூறியுள்ளார்.