எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் விசாக் காலம் முடிவடையும் வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு விசா செல்லுபடிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையைக் கருத்திற்கொண்டு சிகிச்சைப் பணிகளில் மருத்துவர்களின் பங்களிப்பை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய சுகாதார சேவை அமைப்பின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விசா செல்லுபடிக்காலம் தானாகவே ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் 2800 மருத்துவ பணியாளர்கள் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.