மடு பொலிஸார் குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணியளவில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த சட்டவிரோத உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கிகளுடன் 25 வயதுடைய மகனும் 50 வயதுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிறோசன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.