வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார்.
இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.