உயிர்கொல்லி வைரசான கொரோனா பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, சோனியா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டில் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராம மக்கள், திட்ட பணிகளில் ஈடுபடவில்லை. பிற வேலைகளுக்கும் அவர் செல்லமுடியாது.
எனவே அவர்களுக்கு உதவியாக, 21 நாட்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.