இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) கூறுகையில், “ஊரடங்கின்போது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்தசமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடைகளும் திறந்து இருக்கும்.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் மே 3ஆம் திகதிக்குப் பின்னர் மேலும் 2 இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மே 30ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தியிருந்த நிலையில், தேசிய அளவில் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கை பிரதமர் மோடி அமுல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.