இந்நிலையில், இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் அத்தியாவசியப் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தொடர் ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்று நடமாட்டம் குறைாகவே காணப்பட்டது எனவும் கிளிநொச்சி முக்கிய இடமான சேவைச் சந்தையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது.