6E 2403 என்ற இண்டிகோ நிறுவன விமானத்தில் வந்தவர்களும் 15 – 765 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானத்தில் வந்தவர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் மருத்துவ உதவிக்கு 044 – 2538 4520 என்ற எண்ணுக்கோ 044 – 4612 2300 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது