நாடு முழுவதும் இன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்வினை மக்கள் தங்களது வீடுகளில் நிறைவேற்றி கொரோனா வைரஸில் இருந்து மீண்டுவருவதற்கான நம்பிக்கையை பலப்படுத்திக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.
அப்போது, ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டேரர்ச் லைட் அல்லது தொலைபேசி வெளிச்சம் ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்நிகழ்வு இந்தியா முழுவதும் இடம்பெற்றுள்ளது.