குருமன்காடு பகுதியில் வசித்துவரும் ஒருவர் ஊரடங்கு வேளையில் வாகனத்திற்கு அனுமதி தருமாறும் தனது பதிவு சமனங்குளத்திலேயே உள்ளதாகவும் தெரிவித்து கிராம சேவகருடன் முரண்பட்டுள்ளார்.
இதையடுத்து, தன்னுடைய பணிக்கு இடையூறு விளைவித்ததாக சமனங்குளம் கிராம சேவகரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரச உத்தியோகத்தருடன் முரண்பட்டு அவருக்கு இடையூறு விளைவித்தமையை கருத்திற்கொண்டு சந்தேகநபரை சட்டத்தின் முன் கொண்டுசெல்லும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.