தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்திருந்தனர்.
இதன்போது, நோய்த் தொற்று குறைவாகவுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் தொழிற்சாலைகளை இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சில தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுனர் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அத்தியாவசிய உற்பத்தி மற்றும் தொடர் செயற்பாடுகள் தவிர, பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளதுள்ள நிலையில் தமிழகத்திலும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.